காஞ்சீபுரம், குன்றத்தூர் ஒன்றியத்தில் படப்பை, ஒரகடம், சாலமங்கலம், வரதராஜபுரம், எழிச்சூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சாலை ஒரங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இது குறித்து குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அனைத்து ஊராட்சியிகளிலும், 'நம்ம ஊர் சூப்பரு' என்ற பெயரில் பேனர் வைப்பதோடு சரி, இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. எனவே, குப்பை கழிவுகளை அகற்றி, இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.