சென்னை திரு.வி.க. நகர் பஸ் நிலையத்திலிருந்து அங்குள்ள மசூதி வரை சுமார் அரை கி.மீ சாலை ஓரத்தில் கடையில் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இரவில் கடை நடத்தி விட்டு அப்படியே பொருட்களை தார்பாய் வைத்து மூடி வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். அருகில் கடைகள் அமைக்க இடங்கல் இருந்தும் அவற்றை பயன்படுத்தாமல் சாலையில் கடைகளை வைக்கப்பட்டுள்ளது. இதனால் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?