சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் மசுதி தெருவில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த தபால் அலுவலகம் சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதனால் மக்கள் அதிகம் உள்ள மேற்கு சைதாப்பேட்டையில் பொதுமக்களுக்கு உரிய நேரத்திற்கு தபால் வருவதில்லை. எனவே அப்பகுதியில் தபால் அலுவலகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.