மயிலாடுதுறை 35-வது வார்டு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் சேர்ந்து துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை