காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை, கரசங்கால், செரப்பணஞ்சேரி, பணப்பாக்கம், சாலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் சாலை ஓரம் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சாலையில் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.