விளம்பர பேனர் அகற்றபடுமா

Update: 2023-05-03 13:30 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையின் அருகே ஏராளமான பொதுமக்கள் பேருந்தில் செல்வதற்காக நின்று வருகின்றனர். இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள கட்டிடத்தின் மீது விளம்பர பேனர் வைத்து பல மாதங்கள் ஆகியும் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. விளம்பர பேனர் பேருந்துக்காக நிற்கும் பொதுமக்கள் மீது விழுந்துவிடும் என்ற அச்சத்திலேயே மக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விளம்பர பேனரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்