சின்ன காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள மழை நீர் கால்வாயின் மேற்பகுதி நீண்ட நாட்களாக திறந்தே நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவிகள் அவ்வழியாக நடந்து செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இரவு நேரங்களில் அவ்வழியாக கால்வாயின் மீது நடந்து செல்பவர்கள் கவன குறைவாக கால் இடறி கீழே விழ வாய்ப்புள்ளது. இதேபோல் காஞ்சீபுரம் மாநகரில் ஆங்காங்கே மழைநீர் கால்வாய் மேற்பகுதி உடைந்து திறந்தே உள்ளது. இதனை மாநகராட்சி துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்