காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரணிப்புத்தூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் சுடுகாடும் இருப்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறு குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. இந்த பகுதியில் கொட்டப்பட்டு இருக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.