திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி அருகில் உள்ள பஸ் நிறுத்தம் நிழற்குடை இல்லாமல் உள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில் நோயாளிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, அங்கு நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.