சென்னை திருவான்மியூர், திருவள்ளுவர் நகரில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்யப்படுகிறது. பச்சை மரத்தில் ஆணி அடிப்பது குற்றம் என்று தெரிந்தும் பலர் விதிகளை மீறி இச்செயல்களை செய்கின்றனர். மேலும், பல இடங்களில் மரத்தில் ஆணி அடித்து விளம்பரம் செய்யப்பட்டுகிறது. இவ்வாறு ஆணி அடித்து விளம்பரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உரிய விழிப்புணர்வை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும்.