சென்னை, திருவொற்றியூர் கலைஞர் நகர் 63-வது தெருவில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பல நாட்களாக குப்பை நிரம்பி வழிகிறது. இதனால், அப்பகுதி அசுத்தமாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு முறையும் குப்பை தொட்டி நிரம்பிய பின்னர் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சாலையில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.