சென்னை அடையாறு, இந்திரா நகர் 14-வது குறுக்கு தெரு, கானல் பேங்க் சாலையில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பிடம் 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை உடனடி நடவடிக்கை எடுத்து கழிப்பறையை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.