சென்னை இ.வி.கே.சம்பத் சாலையில் பெரியார் திடம் எதிரே உள்ள பழமை வாய்ந்த மரம் பட்டுப்போய் உள்ளது. அந்த மரத்தின் காய்ந்த கிளைகள் சாலையின் குறுக்கே விழுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் மாணவர்களும் அச்சத்துடன் செல்கின்றனர். அந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?