சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் தொட்டமாகரவள்ளி குளம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு இந்த குளத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், குளத்தின் கரைபகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குளக்கரை சேதமடைந்து, விவசாயிகள் அந்த வழியாக செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்துப்பகுதியில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்கவும், சேதமடைந்த குளக்கரையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.