மயிலாடுதுறை ரெயில்நிலையத்திலிருந்து அரசு ஆஸ்பத்திரி அருகே பயன்பாடற்ற நிலையில் குளம் உள்ளது. அந்த குளம் தூர் வாரப்படாமல் புதர் ஆகாயத்தாமரைகள் புதர் போல மண்டிக்கிடக்கிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் உள்ள ஆகாய தாமரை செடிகளை தூர் வார வேண்டும்.
பொதுமக்கள், மயிலாடுதுறை