நாகையில் ஓடும் மணல் லாரிகளில் அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வைத்துள்ளனர்.இதனால் மற்ற வாகன ஓட்டிகள் சத்தம் கேட்டவுடன் அதிர்ச்சியில் நிலை தடுமாறுகின்றனர். மேலும் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மணல் லாரிகள் செல்லும் போது அதிக சத்தத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மணல் லாரிகளில் உள்ள காற்று ஒலிப்பான்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை