திருவள்ளூர் மாவட்டம்பூவிருந்தவல்லி தாலுக்கா, வரதராஜபுரத்தில் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் வீடுகளை ஒட்டி அமைந்துள்ளதால், அதன் வயர்கள் வீடுகளில் உரசும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடனே தினந்தோறும் கழிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.