ஆபத்தான மின்மாற்றி

Update: 2025-12-28 12:57 GMT

சென்னை கொரட்டூர் சாந்தி நகர் அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதி. இந்த பகுதியில் உள்ள மின்மாற்றியில் மின் வயர்கள் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு உள்ளன. இதனால் மழைக்காலங்களில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். வயர் தொங்கிக்கொண்டு இருப்பதால் கீழே விழுந்துவிடும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்