திக்கிலான்விளை பகுதியில் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கபட்டு தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒரு மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள சுவிச்சு போட்டில் ஒயர்கள் அறுந்து கீழே தொங்குகிறது. இதனால் அதனுடன் இணைப்பட்டுள்ள 2 தெருவிளக்குகள் ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றன. எனவே, பொதுமக்கள் நலன்கருததி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறுந்து தொங்கும் ஒயர்களை சீரமைத்து தெருவிளக்குகளை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், திக்கிலான்விளை.