விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரம் என்.ஜி.ஓ.காலனி 13-வது தெருவில் கடந்த சில நாட்களாகவே மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடேயே திருட்டு அச்சம் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.