செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் பகுதியில் உள்ள மேம்பாலம் வாகனங்கள் அதிகமாக செல்லும் பகுதி. இந்த மேம்பாலம் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில், மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.