புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்லுக்காரன்பட்டிக்கு செல்லும் விளக்கு சாலையில் இருந்து வடக்குத்தெருவுக்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. இந்த பழுதடைந்த மின்கம்பத்திற்கு அருகில் புதிய மின்கம்பம் நட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பழைய மின்கம்பத்திலேயே ஆபத்தான நிலையில் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால், காற்றடிக்கும் நேரத்தில் பழுதடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் விவசாயிகள் மற்றும் கால்நடை நடமாட்டத்தின்போது பெரிய விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிதாக நடப்பட்ட மின்கம்பத்தின் வழியாக மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.