காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி ஆத்தனஞ்சேரி, காந்தி தெருவில் உள்ள மின்கம்பம் சிமெண்ட் பெயர்ந்து விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மின்கம்பம் எப்போழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரிசெய்யவேண்டும்.