திருவள்ளூர் மாவட்டம் ஏலியம்பேடு கிராமத்தின் வழியாக வரும் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நீர் வளத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான மதிப்பிடுகள் தயாரிக்கப்பட்டு பல மாதங்கள் நிலுவையில் உள்ளது. மழை காலங்களில் ஏலியம்பேடு கிராமத்தின் வழியாக ஆரணி ஆற்றின் 15டிஎம்சி தண்ணீர் கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் தடுப்பணை விரைவாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.