காஞ்சீபுரம் பஸ் நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவு ஷேர் ஆட்டோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்படுவதால் அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுரி செல்லும் மாணவர்கள் பேருந்தினை தவறவிடும் சூழல் உண்டாக்குகிறது. இதனால் சரியான நேரத்தில் செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகுகின்றனர். எனவே போக்குவரத்து காவல்துறை இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.