செங்கல்பட்டு மாவட்டம் அரசு ஆஸ்பத்திரியில் புறநோய்க்காக சிகிச்சைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் நின்று டாக்டர்களை பார்க்க ரசீது வாங்குகின்றனர். மேலும் கொரோனா கட்டுப்பாட்டுகளை மீறி பெரும்பாலோனோர் முக கவசம் அணிவது இல்லை. இதனை மருத்துவ நிர்வாகமும் கண்டுக்கொள்வது கிடையாது. எனவே நோயாளிகளின் வசதிக்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கவும், பொதுமக்களுக்கு முக கவசம் அணிந்து வர ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.