மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது ஆனால் அது இப்போது சரியாக திறப்பதில்லை அப்படியே திறந்தாலும் மாலை நேரங்களில் திறக்கப்படுகிறது ஆகையால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஆகையால் முழு நேரமும் டிக்கெட் முன்பதிவு மையம் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள் மயிலாடுதுறை