சென்னை 186 -வது வார்டு ஜெயா நகர் முதல் குறுக்கு தெருவில் கழிவுநீர் முழுவதும் தெருவில் விடப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயமும் கொசு மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் சூழலில் உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.