திருவள்ளுர் ,திருவேற்காடு ஈஸ்வரன் தெருவில் ஆழ்துளை கிணறு சரியான பராமரிப்பு இல்லை என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையால் அந்த ஆழ்துளை கிணறு சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் துணைநின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.