மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு குத்தாலத்திருந்து திருமணஞ்சேரி கோவிலுக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மினி பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மினி பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்