திருவள்ளூர், திருவேற்காடு ஈஸ்வரன் நகர் முதல் குறுக்கு தெருவில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு சரியான பராமரிப்பு இல்லாமல் திறந்து கிடக்கிறது. அப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிகமாக உள்ளார்கள். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த ஆழ்துளை கிணற்றை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.