மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலூகாவை சேர்ந்தது ஆக்கூர் கிராமம். இங்கு ஆக்கூர் , மடப்புரம் என இரண்டு ஊராட்சி மன்றங்களாக பிரிந்து உள்ளன. இதனால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர கிடைப்பதில்லை. ஆகவே ஆக்கூர், மடப்புரம் இரண்டு ஊராட்சிகளை இணைத்து ஆக்கூர் பேரூராட்சியாக மாற்றினால் மக்களுக்கு தெரு விளக்கு, சாலை , குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், மயிலாடுதுறை