சென்னை கண்ணகி நகர், ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து கண்ணகி நகர் மெயின் ரோடு சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் அனைவரும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.