குடிநீருடன் கழிவுநீர்

Update: 2023-04-10 06:29 GMT

சென்னை, தண்டையார்பேட்டை 42-வது வார்டு, சேனியம்மன் கோவில் நகர் மெயின் தெருவில் உள்ள குடிநீர் குழாய் இருக்கும் இடத்தில கழிவு நீர் வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது. குடிநீருடன் கழிவு நீரும் கலக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வாரத்தில் 2 முறை இவ்வாறு கழிவு நீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.


மேலும் செய்திகள்