குண்டும், குழியுமாக சாலை

Update: 2023-04-10 06:29 GMT

சென்னை, மடிப்பாக்கம் 188-வது வட்டம் பெரியார் நகர், 5-வது தெரு காஞ்சி காமாட்சி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணி முடிந்துள்ளது. இந்த சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. பள்ளி மாணவர்களும், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சென்னை மாநகராட்சி இப்பகுதிகளில் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும். தோண்டப்பட்ட பகுதியில் தார்கள் கொண்டு பூசிட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


 

மேலும் செய்திகள்