சென்னை, அனகாபுத்தூர் காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் அம்பேத்கர் சிலை அருகிலும், அருண்மதி தியேட்டர் அருகிலும் மிகவும் அபாயகரமான சாலை வளைவு உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்களும், பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வேகத்தடைகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.