கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-04-10 06:28 GMT

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் கிராமத்தில் உள்ள ஏரியின் அனைத்து பாசனக் கால்வாய்களும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் கோவில் தெரு பகுதியில் உள்ள பாசனக்கால்வாய் மேல் தனிநபர்கள் ஆக்கிமிரப்பு செய்துள்ளார்கள். கால்வாய் மேல் சிமெண்ட் கான்கிரிட் போட்டு கார் பார்க்கிங் ஏற்படுத்தி உள்ளனர். இதனால், மழைநீர் மற்றும் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் கால்வாய் அடைப்பினால், செல்ல முடியாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தி அதிமாகியுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

மேலும் செய்திகள்