சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கருப்பூர் சந்தைபேட்டை சந்தைக்கு செல்லும் சாலையில் சிலர் இரும்பு தடுப்பு வைத்து அடைத்துள்ளனர் என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த இரும்பு தடுப்பை அகற்றினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.