சென்னை வேளச்சேரி, ஓரகண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஒட்டிகளுக்கு இடையூராகவும் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.