உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் காலை, மாலை வேளையில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால் மைதானத்தில் பல பகுதிகளில் மரங்களின் இலைகள் உதிர்ந்து காய்ந்துபோய் கிடக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளும் சிதறி கிடக்கிறது. இதனை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும்.