காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பல்வேறு ஊராட்சி சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு உயரமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் வேகத்தடையை கடக்கும் போது தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையை சமப்படுத்த வேண்டும்.