சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள மேட்லி சப்வேயை இணைக்கும் சாலை சேதமடைந்து மேடும்,பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.