காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லன் நகரில் உள்ள குபேரேஸ்வரர் கோவில் தெரு சாலை சேதமடைந்து மேடும்,பள்ளமாக உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தெருக்களில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இவை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.