திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பூரான்,பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்து விடுமோ என்று அப்பகுதியினர் அச்சப்படும் சூழல் அமைகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும்.