சென்னை அசோக்நகர் 122-வது வார்டு, பகுதி 24, 12-வது அவென்யூவில் உள்ள சிறுவர் விளையாட்டுத் திடலுடன் கூடிய பூங்கா பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளது. சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் என தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இந்த பூங்காவில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான உபகரணங்கள் உடைந்து காணப்படுவதுடன் அன்றாடம் தூய்மை பணியும் நடைபெறாமல் குப்பைக் கூளங்கள் நிறைந்து நோய் தொற்றால் மக்கள் பாதிக்கப்படும் சுழல் நிலவுகிறது. பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.