காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் படப்பை ஊராட்சியில் பன்றிகள் அதிகம் சுற்றிதிரிகின்றனர். இவை கூட்டம் கூட்டமாக ஊருக்குள் சென்று குப்பைகளை கிளறுவதால் அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்றும் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.