காஞ்சீபுரம் மாவட்டம், நரசிங்கபுரம் காலனி சிங்கப்பெருமாள் கோவிலில் அரசு சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த விடுதி பூட்டியே கிடக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விடுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.