காஞ்சீபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் சாலையில் தொலைதொடர்பு கேபிள்கள் பதிப்பதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளத்தை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.