காஞ்சீபுரம் மாவட்டம், அய்யப்பந்தாங்கள், போகன் வில்லா பகுதிகளில் நாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் புதிதாக வருபவர்கள் மற்றும் தபால் கொண்டு வருபவர்கள் தெருவில் செல்ல முடியாத அளவிற்கு நாய்கள் குரைத்து கொண்டும், சில சமயம் கடிக்கவும் வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.