காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ராஜ வீதி அருகே மின்கம்பத்தின் மின்கம்பிகள் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருக்கிறது. தாழ்வாக இருப்பதனால் கனரக வாகனங்கள் மீது உரசி மின் கசிவு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு மின் கம்பியை சரிசெய்ய மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.